0
இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை விற்பனை செய்து பிரபலமான சியோமி நிறுவனம் எம்ஐ ஃபேன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் சிறப்பு விற்பனையை
நடத்துகிறது. சியோமியின் இணைய தளத்தில் இதற்கென பல்வேறு சாதனங்களை விற்பனைக்கு வழங்க சியோமி திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையின் கீழ் ரூ.1 பிளாஷ் விற்பனையும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு இலவசங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவுள்ளது. விற்பனையின் முதற்கட்டமாக ரூ.1 பிளாஷ் விற்பனை நடைபெறவுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ரூ.1க்கு வாங்க முடியும். இந்த சலுகை செயலியில் மட்டும் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் செயலியை டவுன்லோடு செய்து விற்பனையில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும். இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு சிறப்பு விற்பனை துவங்கும்.

எம்ஐ ஸ்டோர் செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 20 புத்தம் புதிய ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். இதே போல் மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் விற்பனையில் 40 எம்ஐ பேன்ட் மற்றும் 50 - 10,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க் சாதனங்களை ரூ.1 செலுத்தி வாங்க முடியும். சியோமி சிறப்பு விற்பனை ஏப்ரல் 6-ந்தேதி துவங்கும் முன்பே ஏப்ரல் 5-ந்தேதி வரை சலுகை சீட்டுக்களை சியோமி வழங்கி வருகிறது. சியோமி சிறப்பு தள்ளுபடி விற்பனை நாளில் சாதனங்களை வாங்குவோர் சலுகை டோக்கன்களை பயன்படுத்தி ரூ.50, ரூ,100, ரூ.200 மற்றும் ரூ.500 வரையிலான தள்ளுபடிகளை கூடுதலாக பெற முடியும். பிளாஷ் விற்பனையில் உங்களுக்கு விருப்பமான சாதனங்களை வாங்க முன்கூட்டியே யோமியின் இணைய தளம் மற்றும் செயலியில் உங்களின் டெலிவரி செய்யப்பட வேண்டிய சரியான முகவரி, பணம் செலுத்த நீங்கள் பயன்படுத்த இருக்கும் கார்டு தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top