0
விஜய் டி.வியிலும், புதுயுகம் சேனலிலும் நிகழ்ச்சி தொகுப்பு, நடனம் என்று கலக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீரஞ்சனி. கல்யாணம் முதல் காதல் வரை ஹீரோ அமித் பார்கவை காதலித்து திருமணம் செய்து
கொண்டபிறகு சத்தமின்றி சின்னத்தரையிலிருந்து ஒதுங்கி விட்டார்.

ஆனால் மீடியாவின் இன்னொரு தளத்தில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூ டியூப் சேனலில் ரீல் அந்து போச்சு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு செம ரெஸ்பான்ஸ். இதுதவிர வெளிவரும் படங்களை விமர்சிக்கிறார். டுவிட்டர் பேஸ்புக் மூலம் திரைப்படங்களை புரமோட் செய்கிறார். இதற்கெல்லாம் காதல் கணவர் மிகவும் ஒத்துழைக்கிறாராம்.

கணவர் அமீத் பார்கவ் தற்போது கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். கணவர் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கும் யோசனையிலும் இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி. டெக்னாலஜி வளரும்போது நாமும் அப்டேட் ஆகிக்கணும். ஒரே இடத்துல நிற்ககூடாது என்கிறார் ஸ்ரீரஞ்சனி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top