0
ஜியோ ப்ரைம் உறுப்பினராவதற்கு ரூ.99 கட்டணம் செலுத்த ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் ஜியோவின் இலவசசேவைகள் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. தொடர்ந்து ஜியோ தொலைபேசி எண்ணை பயன்படுத்த வேண்டுமானால், உறுப்பினர் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தி,ஜியோ பிரைம் எனும் திட்டத்தில் சேர வேண்டும்.

ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தால் இலவச சேவைகளைக் குறைந்த செலவில் பெறலாம் எனவும் எந்த ரீசார்ஜும் செய்யவில்லை என்றால் சுமார் 90 நாட்களுக்குள் ஜியோ சிம் செயலிழந்துவிடும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது ஜியோ இலவச சேவை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் ரூபாய் 303 செலுத்தி இலவச சேவையை மேலும் 3 ,மாதங்களுக்கு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை 7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top