0
நல்ல நடிகைகளை எளிதில் மறந்து விடுவது நம் மரபு. அப்படி மறந்தவர்களில் ஒருவர்தான் ருக்மணி விஜயகுமார். பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம்
படத்தில் நடன பெண்மணியாகவும், ஆண் சிறுவனாகவும் நடித்தவர். அவருடன் அறிமுகமான காஜல் அகர்வால் நம்பர் ஒண் இடத்தை பிடித்துவிட்ட நிலையில் ருக்மணி விஜயகுமார் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

பொம்மலாட்டம் படத்திற்கு பிறகு ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு கன்னடப் படத்தில் நடித்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போகவே நடன நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார். சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் அனிமேஷன் கேரக்டரில் நடித்தார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் வருகிறார் ருக்மணி. படம் முழுக்க வருகிற நல்ல கேரக்டராம். இதுவரை அவர் கேரக்டர் பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. படம் வெளிவந்ததும் தனக்கு நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ருக்மணி விஜயகுமார்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top