0
மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை வந்து ஒரு புள்ளியில் டைட்டிலை இழந்வர் ஆலியா மானசா. ஆனாலும்
அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து போராடி இப்போது ஜூலியும் 4பேரும் படத்தின் ஹீரோயினாகிவிட்டார். இதுபற்றி ஆலியா மானசா கூறியதாவது:
நான் பக்கா சென்னை பொண்ணு. எத்திராஜ் காலேஜ்ல கம்ப்யூட்டர் படிச்சேன். விஷ்காம் படிக்கும் தோழிகள் ப்ராஜக்டுக்காக ஒரு குறும்படம் எடுத்தாங்க. அதுல என்னை நடிக்க வச்சாங்க. அதுலேருந்து எனக்கு மீடியா பக்கம் கவனம் வந்தது. முறைப்படி நடனம் கத்துக்கிட்டிருந்ததால மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். பைனல் வரைக்கும் வந்தேன். அதன்பிறகு விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். மானாட மயிலாட நிகழ்ச்சியில் என்னை பார்த்து விட்டு ஜூலியம் 4 பேரும் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க.

இது காணாமல் போகும் ஒரு நாய்குட்டியை பற்றிய கதை. கதைப்படி என் தந்தை வெளிநாட்டிலிருந்து ஒரு நாய்குட்டியை அனுப்புவார். பல ஊரில் இருந்து சென்னைக்கு வந்த நண்பர்கள் தங்கள் பணத் தேவைக்காக இந்த நாய்குட்டியை கடத்தி விடுவார்கள். அந்த நாயை சமாளிப்பது அத்தனை சுலபமல்ல. அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள். நாயை கண்டுபிடிக்க நான் என்ன செய்கிறேன் என்பதை காமெடியாக சொல்கிற படம்.

படத்தில் எனக்கு ஜோடி யாரும் இல்லை. ஆனால் நாயை கடத்திய 4 பேரும் என்னை ஒன்சைட் லவ் பண்ணுவார்கள். எனக்கு நாய் என்றால் பயம். ஆனாலும் பயத்துடனேயே அதனுடன் பழகினேன். இப்போது அதோட பெஸ்ட் பிரண்டு நான். வீட்டிலும் நாய் வளர்க்கணுங்ற ஆசை வந்திருக்கு. நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் ஆலியா மானசா.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top