0
முன்னாள் கதாநாயகியான மேனகாவின் மகள் தான் கீர்த்திசுரேஷ். மலையாளத்தில் சில படங்களில் நடித்த நிலையில் தமிழுக்கு வந்த கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் ராசியில்லாத
நடிகையாக கருதப்பட்டார். அதன்பிறகு அவர் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு ராசியான நடிகையாகிவிட்டார்.

கீர்த்தி சுரேஷ் வழியில் மலையாளத்திலிருந்து இன்னொரு வாரிசு நடிகையும் தற்போது வந்திருக்கிறார். அவர் பெயர்... அர்தனா விஜயகுமார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் செம என்ற படத்தை தயாரித்து வருகிறார். மெரீனா படம் முதலே பாண்டிராஜிடம் நீண்ட காலமாக உதவியாளராக இருந்த வள்ளிகாந்த் இயக்கும் இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்றபோது, ஜி.வி.பிரகாஷுடன் ஜோடியாக நடிக்க, அர்தனா விஜயகுமார் என்ற மலையாள நடிகையை ஒப்பந்தம் செய்தனர்.

இவருடைய அப்பா பிரபல மலையாள நடிகரான விஜயகுமார். தன்னுடைய அப்பா நடிகர் என்பதாலோ என்னவோ படப்பிடிப்புக்கு தன் அம்மா உடன் மட்டுமே வருகிறார் அர்தனா. செம படம் ஒருவேளை வெற்றியடைந்தால் கீர்த்திசுரேஷை அர்தனா அசைத்துப்பார்க்க வாய்ப்பிருக்கிறது.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top