0
யூகன், திருட்டு விசிடி, ஆத்யன்,கககாபோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது ஜீவன் நடித்து வரும்
ஜெயிக்கிற குதிரை என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கும் இவர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது...
சினிமா தான் என்னுடைய வாழ்க்கை என்று தீர்மானித்த பிறகு இதில் நான் முழு தகுதியுடையவராக மாறவேண்டும் என்று விரும்பினேன். இதற்கான தேடலில் இருந்த போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் பிரபலமான நடிப்பு பயிற்சி பள்ளியான லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட பயிற்சி நிறுவனம் என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளியில் இணைந்து நடிப்பில் என்னை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். இங்கு பயிற்சி பெற்ற பலர் முன்னணி நடிகையாகியிருப்பதுடன் ஆஸ்கார் விருதினையும் பெற்றிருக்கிறார்கள். இங்கு கிட்டத்தட்ட நான்கு மாத காலம் கடுமையாக உழைத்தேன். நடிப்பில் உள்ள நுட்பங்களை எல்லாம் தெரிந்து கொண்டு நடிப்பைப் பற்றி கற்று தேர்ச்சியடைந்திருக்கிறேன். இந்த நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி பெற்ற முதல் தென்னிந்திய நடிகை நான் தான் என்பதில் எனக்கு பெருமிதமும் உண்டு. எனக்கு முன்னர் இங்கு ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூர், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் நடிப்பு பயிற்சியைப் பெற்றிருக்கிறார்கள். ஸ்கார்லெட் ஜோகன்சன், உமா துர்மன் உள்ளிட்ட சர்வதேச நடிகைகளும் இங்கு பயிற்சி பெற்றவர்கள் தான். இங்கு நடிப்பை கற்றுக் கொண்டது வித்தியாசமான அனுபவம் தான். பூட்டி பேர் (Booty Barre) என்ற ஒரு வகை நடனப் பயிற்சியையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். அத்துடன் பிலாட்டீஸ் மற்றும் கிக் பாக்சிங் ஆகியவற்றையும் கற்றிருக்கிறேன்.

கவர்ச்சி குறித்து பேசும்போது, எல்லாவிதமான கேரக்டரில் நடிப்பது எளிது. ஆனால் கவர்ச்சியான கேரக்டரில் நடிப்பது தான் கடினம். ஏனெனில் கவர்ச்சியான கேரக்டர் கிடைப்பது கடினம். ரசிகர்களை தன்னுடைய கிளாமரில் ஈர்ப்பது என்பது அதைவிட கடினம். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான கவர்ச்சி பிடிக்கும். அதே சமயத்தில் கவர்ச்சியை, கலையின் ஒரு பகுதி என்ற கோணத்தில் தான் நான் பார்க்கிறேன். அத்துடன் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் எனில் உடல் மொழி, அங்க அமைப்பு, உடைகள், கேமிரா கோணங்கள், இயக்குநரின் கற்பனை என பல விசயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. இதில் எல்லாம் சரியான புரிதலுடன் கேரக்டரின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகைகளின் கவர்ச்சி தான் திரையில் சரியாக எடுபடும். எனவே எனக்கேற்ற A வகையிலான கவர்ச்சியை எல்லையை நானே தீர்மானித்து திரையில் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்வேன்.

ஆக்டிங்கில் தேர்ச்சிப் பெற்ற பிறகு எந்த கேரக்டரிலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஆக்ஷன், காமெடி, ஹீரோயின் ஓரியண்டட் ஸ்கிரிப்ட் என எந்த வகையான படங்களிலும் நடிக்க, நான் முழு அளவில் தகுதிப்படுத்திக் கொண்டு தயாராகயிருக்கிறேன் என்கிறார் சாக்ஷி அகர்வால்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top