0
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம்
செய்யப்பட்ட ஜோதிகா கடைசி நிமிடத்தில் படத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக உடனடியாக வேறு நடிகையைத் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்ட படக்குழுவினர் நித்யா மேனனை ஜோதிகாவிற்குப் பதிலாக ஒப்பந்தம் செய்தனர்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நித்யா மேனன் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் ஆரம்பத்திலிருந்தே முன்னர் திட்டமிட்டபடி விஜய் - ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக்க இருந்தார்களாம். ஜோதிகா விலகியதும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டதாம். இருந்தாலும் அடுத்த சில நாட்களிலேயே ஜோதிகாவிற்குப் பதிலாக நித்யா மேனனை ஒப்பந்தம் செய்து அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்துள்ளனர்.

ஜோதிகா விலகியதால் கோபமடைந்திருந்த படக்குழுவினர் நித்யா மேனனின் திறமையான நடிப்பில் ஜோதிகா விலகினாலும் பரவாயில்லை அதை நித்யா சரி செய்துவிடுவார் என்று தெம்பாக இருக்கிறார்களாம். ஜோதிகாவை விடவும் நித்யா மேனன் இளமையான நடிகை என்பதால் மாற்றத்திலும் ஒரு நல்லது என்றே நினைக்கிறார்களாம். எப்படியோ ஆரம்பத்தில் வந்த நெருக்கடி உடனே சரியாகிவிட்டதே என கவலையை மறந்து படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கி வருகிறது படக்குழு என்கிறார்கள்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top