0
பெங்களூரைச் சேர்ந்த அக்ஷரா கவுடா பிரபலமான விளம்பர பட நடிகை. விளம்பரங்களில் குடும்ப குத்துவிளக்காக பொருட்களை வாங்கச் சொல்லும் அக்ஷரா சினிமாவில் அதிரடி வில்லி, கவர்ச்சி
கன்னி, போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ரன்கிரேஸ் என்ற இந்திப் படத்திலும் ஆட்டம் போட்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த போகன் படம் அக்ஷராவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஜெயம்ரவிக்கு துணையாக வரும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதை பார்த்த பலரும் அக்ஷராவை வில்லி மற்றும் போலீஸ் அதிகாரி கேரக்டர்களுடன் அணுகி வருகிறார்கள். தற்போது மாயவன், சங்கிலி புங்கிலி கதவ தொற படங்களில் நடித்து வருகிறார்.

"ஆடுவது பிடித்த விஷயம் என்றாலும் அது அந்த நேரத்தில் ரசிகனை சந்தோஷப்படுத்தும் அவ்வளவுதான். ஆனால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் நல்ல கேரக்டரில் நடிக்க வேண்டும். போகன் படத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. இனி ஆடுவதை குறைத்து நடிப்புக்கு முக்கியத்தும் கொடுக்க இருக்கிறேன்" என்கிறார் அக்ஷரா கவுடா.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top