0



தொப்பையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அத்தகையவர்கள் அத்தகைய தொப்பையைக் குறைக்க, பல்வேறு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை
மேற்கொள்வார்கள். அப்படி தொப்பையைக் குறைக்க அப்டமன் பயிற்சி அல்லது அடி வயிற்று பயிற்சிகளை செய்தும் தொப்பை குறையவில்லையா? அப்போ இதை படிங்க.
எளிமையானதாகவும் சுலபமானதாகவும் உங்கள் பயிற்சியை துவங்குங்கள். உதாரணத்திற்கு சைக்கிள் ஓட்டத் தெரியாமல் உங்களால் வெகு தூரம் சைக்கிள் பந்தயத்தில் செல்ல முடியாது. அது போல துவக்கத்தில் எளிதான பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள் - ஒரு பலகையை 20 நொடிகள் பிடித்துக் கொண்டோ அல்லது 10 முறை க்ரன்ச் (Crunch) பயிற்சியையோ செய்து வாருங்கள்.
பலர் பயிற்சி செய்வதற்கு முன் முறையாக தங்களை தயார் செய்து கொள்ள தேவையில்லை என்று நினைத்துக் கொண்டு, தங்களை சரியான முறையில் தயார் செய்து கொள்வதில்லை. கடினமான பயிற்சியை மேற்கொள்ளும் போது, தசைகளில் வலியும், காயங்களும் வீக்கங்களும் ஏற்படலாம்.
ஆகையால் பயிற்சிக்கு முன் 'வார்ம் அப்' செய்வது, உடலின் தசைகளில் காயங்கள் ஏற்படுவதை தடுக்கும். உதாரணமாக, சிறிது தூரம் விரைவாக நடப்பது, குனிந்து உங்கள் பாதங்களை மெதுவாக தொடுவது, மூச்சை இழுத்து விடுவது, இடுப்பை வளைத்து சில பயிற்சிகள் மெதுவாக செய்வது சிறந்ததாகும்.
இச்செயல்கள் உங்களை வயிற்று பயிற்சிக்கு தயார்படுத்தும். வயிற்று பயிற்சியின் போது முக்கிய தசைகள் நன்றாக செயல்பட ஆக்ஸிஜன் இன்றியமையாததாகும். எனவே மூச்சை அடக்கக் கூடாது. பயிற்சியின் போது எளிமையான நேரங்களில் மூச்சை இழுக்கவும், அதுவே கடினமாக இருக்கும் நேரங்களில் மூச்சை வெளியே விடவும் வேண்டும்.
உதாரணமாக, க்ரன்ச் பயிற்சியில் மேல் எழும் போது மூச்சை வெளியே விட வேண்டும். பயிற்சியின் போது தசைகள் மட்டும் தான் முக்கிய பங்கு வகிப்பதில்லை உங்கள் மனமும் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் பயிற்சியின் தசைகள் மீது கவனம் செலுத்துங்கள். தசைகள் நகர்ந்து, விரிவடைவதையும் சுருங்குவதையும் உணருங்கள்.
இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். தட்டையான வயிற்றைப் பெற எல்லா பக்கங்களிலும் தசைகளை நகர்த்தி பயிற்சி செய்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம். க்ரன்ச் பயிற்சியில் மட்டும் கவனம் செய்யாதீர்கள். வக்ராசனா போன்று உடம்பை வளைக்கும் மற்றும் திரும்பும் விதமான பயிற்சிகளையும் செய்யலாம்.
வலிமையான வயிற்றைப் பெற உங்கள் வழக்கான பயிற்சியில் சில பாலன்ஸ் செய்யும் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒற்றை காலில் நின்று மற்றொரு காலை தொடையின் மீது வைத்துக் கொள்வது, கைகளை தலைக்கு மேல் வைத்து உள்ளங்கைகளை தொடும் வண்ணம் வைத்துக் கொள்வது என 'விரிக்காசனா' போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.
உங்களின் பயிற்சி முழுமையடைய போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வயிற்று பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்வதால் பலன் பெற முடியாது. ஓய்வு எடுப்பதால் தசைகள் மீண்டு மேலும் உறுதியடையும். அவசர அவசரமாக பயிற்சி செய்தால் பலன் பெற முடியாது.
மெதுவாகவும், நிதானத்துடனும் பயிற்சி செய்தால் சிறந்த முறையில் கொழுப்பை குறைக்கலாம். நிதானமாக செய்யும் பயிற்சி மட்டுமே விரைவில் முழுமையான பலனைத்தரக்கூடியது. எனவே பயிற்சி செய்யும் போது நிதானமாகவும். ஒவ்வொரு பயிற்சிக்கு இடையிலும் சிறிது இடைவெளி விட்டும் பயிற்சி செய்ய வேண்டும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top