0
ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன், டிஹெச்ஏ (டைஹைட்ராக்ஸி அசிடோன்) என்ற இரசாயனத்தை, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உபயோகித்துக்
கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கர்ப்ப காலத்தைப் பற்றி பேசுகையில், நம் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி கட்டாயம் கூறியாக வேண்டும்.
வெயிலில் பல மணிநேரம் இருப்பதன் மூலம் சருமத்தின் கருமையைப் போக்கும் வழிமுறை, சரும புற்றுநோயை உருவாக்கும். அதிலும் முக்கியமாக, கர்ப்ப காலத்தின் போது உடல் பலவீனமாக இருப்பதினால், பல்வேறு நோய்களும் எளிதில் தொற்றிக் கொள்ளும் அபாயமும் இருக்கும். கருமையடைந்த சருமப் பகுதிகளில் ஸ்ப்ரே உபயோகிப்பது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.
எனவே, கர்ப்ப காலத்தின் போது இது போன்ற சிகிச்சைகளை தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். சருமத்தை வெளுப்படையச் செய்யக்கூடிய சாதனங்களில் கலந்திருக்கும் அதிக அளவிலான இரசாயனங்கள் என்ஸைமாட்டிக்கை பாதித்து, உங்கள் சருமத்தை கருப்படையச் செய்யும்.
ஆகவே குழந்தையை பிரசவிக்கும் வரையில் கர்ப்பிணிப் பெண்கள் இது போன்ற பொருட்களை உபயோகிக்காதிருப்பது நலம். மேலும் குழந்தை பிறப்பிற்குப் பின் அவர்கள் இது போன்ற அழகு சாதனங்களை உபயோகித்து தாங்கள் விரும்பியவாறு தங்கள் சருமத்தை அழகுபடுத்திக் கொள்ளலாம்.
உடலில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுவதற்கு உபயோகிக்கப்படும் பொருட்களில் இருக்கக்கூடிய தையோகிளைக்கோலிக் ஆசிட் எனப்படும் வேதிப்பொருள் கர்ப்ப காலத்தின் போது உபயோகிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல. பெண்கள் சிலர் பல்வேறு வகையான வாசனைகள் திரவியங்களை விரும்புவார்கள்.
எனினும், கர்ப்ப காலம் என்று வரும் போது, இது போன்ற அதீதமான வாசனைகள் கருவிலிருக்கும் குழந்தையின் ஹார்மோன் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டு அதனை பாதிக்கும். அதனால் பெர்ஃப்யூம்கள், டியோடரண்ட்டுகள், ரூம் ஃப்ரெஷனர்கள் போன்ற வாசனைத் திரவியங்களின் அபரிமிதமான உபயோகத்தை அறவே ஒதுக்கி விடுவது நலம்.
சில பெண்களுக்கு விருப்பமான டாட்டூக்களை உடம்பில் குத்திக்கொள்ள ஆசை இருக்கும். ஆனால், நீங்கள் கருத்தரித்திருக்கும் பட்சத்தில், உங்கள் உடலில் டாட்டூ குத்துவது உகந்ததல்ல. ஆரோக்கியமான குழந்தையை பிரசவிக்கும் வரையில் நீங்கள் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
டாட்டூ குத்துதல் உங்கள் உடலுக்கு (முக்கியமாக கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில்) கடுமையான நோய் தொற்றை உண்டாக்குவதுடன், பல்வேறு நோய்களையும் எளிதில் பரப்பக்கூடும். கர்ப்ப காலத்தின் போது இது போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபடுவது குழந்தைக்கும், தாய்க்கும் நல்லதல்ல.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top